டெல்லி: இந்திய எல்லையில் குடியரசு தினத்தன்று நடைபெறும் கொடி இறக்கும் நிகழ்வில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்று எல்லை பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆண்டுதோறும் நாட்டின் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போது வாகா – அட்டாரி எல்லையில் இனிப்புப் பரிமாற்றம் நடைபெறுவது வழக்கம். சில வருடங்களாக அவ்வப்போது இந்த நிகழ்வு தடைபட்டு வந்தது.
எல்லையில் கொடி ஏற்றும் போது காலையில் 2 நாட்டு வீரர்களும் இனிப்பு பரிமாறிக்கொள்வார்கள். மாலையில் கொடியை இறக்கிவிட்டு, பக்கமும் இரு நாட்டு வீரர்களும் சிறிய அணிவகுப்பை நடத்துவார்கள். பின்னர் அவர்கள் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம்.
இதை காண ஏராளமானோர் வருவது உண்டு. இந் நிலையில் இந்திய எல்லையில் குடியரசு தினத்தன்று நடைபெறும் கொடியிறக்கும் நிகழ்வில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்று எல்லை பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. இந்த முறை பார்வையாளர்கள் இல்லாமல் கொடியிறக்க நிகழ்வு நடக்க உள்ளது.