சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிட தடையில்லை என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிவடைந்த நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், மாநகராட்சியின் ஒட்டுமொத்த வார்டுகளையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாக பிரித்து வழங்கக்கோரி உத்தரவிட வேண்டும் என பார்த்திபன் என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, மாநில தேர்தல் அணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வரும் 27-ம் தேதிக்குள் வெளியிட வேண்டுமென மத்திய அரசு தெரிவித்துள்ளதாகவும், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வெண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது.
இதைடுத்து, ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகள்தான் இந்த வழக்கின் தீர்ப்புக்கு உட்பட்டது என இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, மேலும், தொடர்பான அறிவிப்பாணை வெளியிட எந்தவித தடையும் விதிக்கவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.