டில்லி
ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்வோருக்கு முன் ஜாமீன் அளிக்கக் கூடாது என உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜி எஸ் டி வரி ஏய்ப்பு செய்வோர் மீது வரித்துறை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இது குறித்து பதியப்பட்ட சில வழக்குகளில் மும்பை உயர்நீதி மன்றம் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்படாததால் கைது செய்யக் கூடாது என முன் ஜாமீன் வழங்கி இருந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தெலுங்கானா உயர்நீதிமன்றம் இது குறித்த வழக்கில் ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது செய்ய உரிமையும் மற்றும் வரி ஏய்ப்பு செய்ததாக கைது செய்ய்ப்பட்டவருக்கு இடைக்கால நிவாரணம் வழங்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில் ஜிஎஸ்டி ஆணையர்கள் காவல்துரை அதிகாரிகள் அல்ல எனவும் வரி ஏய்ப்பு செய்பவர்களை கைது செய்வதில் அவர்கள் பல நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
உச்சநீதிமன்றம் இந்த வாதங்களை நிராகரித்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்வோருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. அத்துடன் எஃப் ஐ ஆர் பதிவு செய்யாமலே ஜிஎஸ்டிஆணையர்கள் கைது செய்யலாம் என உரிமை அளித்துள்ளது.