டில்லி:
பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.

ஓடிசா முதல்வர் நவீன் பட் நாயக் டில்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். இதன் மூலம் லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம் ஏற்பட்டுள்ளது என்று உள்ளூர் மீடியாக்களில் செய்தி வெளியாயின.
இது குறித்து நவீன் பட்நாயக் கூறுகையில், ‘‘புத்தக வெளியீடு தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்தேன். அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது தவறான தகவலாகும்.
கூட்டணி விஷயத்தில் காங்கிரஸ், பா.ஜ.க என இரு தேசிய கட்சிகளையும் சம தூரத்தில் வைத்துள்ளோம். ஒடிசாவின் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் பிஜூ ஜனதா தள அரசு செய்துள்ளது’’என்றார்.
Patrikai.com official YouTube Channel