பாட்னா

பீகார் சட்டசபையில் நிதிஷ்குமார் எதிர்கட்சி எம் எல் ஏ ஒரு பெண் என்பதால் அவருக்கு ஒன்றும் தெரியாது எனக் கூறி உள்ளார்.

ராஷ்டிரீய ஜனதாதளம் பீகார் அரசின் திருத்தப்பட்ட இடஒதுக்கீடு சட்டத்தை அரசியலமைப்பின் 9-வது அட்டவணையில் சேர்த்து பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகிறது. நேற்று இது தொடர்பாக சட்டசபையில் அந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அனைவரும்ம் அவையின் மையப்பகுதிக்கு சென்று தங்கள் கோரிக்கை தொடர்பாகவும், முதல்வர் நிதிஷ்குமாருக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இவர்களில் ரேகாதேவி உள்பட பெண் எம்.எல்.ஏ.க்களும் இருந்தனர்.  தனக்கு எதிராக பெண் எம்.எல்.ஏ.க்களும் கோஷமிட்டதைப்பார்த்த நிதிஷ்குமார் கடும் கோபமடைந்தார்.

எனவே அவர் இருக்கையில் இருந்து எழுந்து ரேகா தேவியை பார்த்து கை விரல்களை நீட்டி ஆவேசமாக பேசினார்.

நிதிஷ் குமார்,

”நீங்கள் ஒரு பெண். நான் ஆட்சிக்கு வந்த பிறகுதான் பெண்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் கிடைத்தது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் ஒரு பெண்எபதால் உங்களுக்கு எதுவும் தெரியாது’

என சத்தமாக பேசினார்.

அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு நிதிஷ்குமாரின் இந்த செயலுக்கு ராஷ்டிரீய ஜனதாதளம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.