|டெல்லி: நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடு இருக்கும்போது மோடி சர்வாதிகார ஆட்சி நடத்த முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 18வது மக்களவை அமைப்பதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இருந்தாலும் கடந்த தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. 292 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் 240 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. ஆனால், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 272 தொகுதிகள் தேவை என்பதால், எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை. ஆனால், பாஜக மட்டுமே தனிப்பெரும் கட்சியாக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெருங்கட்சியாக என்பதால், மீண்டும் மோடி தலைமையில், கூட்டணி ஆட்சி அமைக்கப்பட உள்ளது.
காங்கிரஸ் திமுக உள்பட 28 கட்சிகளைக்கொண்ட இண்டியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்வதாக தகவல்கள் பரவி வந்தது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ராஜ்யசபா எம்.பி., கபில் சிபல் , “நிதீஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் எப்போதும் கூட்டாட்சி அமைப்பை பராமரித்து வருகின்றனர்… சில ஆண்டுகளுக்கு முன், பாஜகவுக்கு எதிராக பேசிய நாயுடு, நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடத்த முடியாது கூறியிருந்தார் என்பதை சுட்டிக்காட்டியதுடன், இனிமேல், மாநிலங்களின் அனுமதியின்றி ED மற்றும் CBI என்ன செய்தாலும் அதை ஏற்க முடியாது. ஒ அவர்கள் மோடியை சர்வாதிகார ஆட்சி நடத்த விடமாட்டார்கள் என நம்புகிறேன். அதற்காக அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன், அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது மத்திய அரசுக்கு எதிரான நிலைநிறுத்தப்பட்ட மதிப்புகளை இப்போதும் அவர்கள் நிலைநிறுத்துவார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.