ஈரோடு : பெண் அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமனுக்கு அடக்கமும் பணிவும் வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோட்டில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்து வெளியே காட்டியது கேவலமான விஷயம். மன்னிப்பு கேட்கும்போது நிர்மலா சீதாராமன் எந்த உணர்வு இல்லாமல் இருந்துள்ளார். பெண் அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமனுக்கு அடக்கமும் பணிவும் வேண்டும். மனிதனை மதிக்கும் மனிதத்தன்மை நிர்மலா சீதாராமனிடம் இல்லை,”
இவ்வாறு கடுமையாக சாடினார்.
பெண்ணுரிமைக்காக போராடி இ.வே.ராமசாமி நாயக்கர் (பெரியார்) வழியில் வந்த இவிகேஎஸ் இளங்கோவன், மத்திய அமைச்சரான நிர்மலா சீத்தாராமனை, பெண் அமைச்சர் என்ற தொனியுல், இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சர்ச்சைகளுக்கு பெயர் போன இவிகேஎஸ் தற்போது பெரியார் பிறந்த தினத்தில் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியிருப்பது கடுமையாக விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.