மும்பை:

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் வைர வியாபாரி நிரவ் மோடி அமலாக்கத்துறை முன்பு ஆஜராக முடியாது மெயில் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகிறது. நிரவ் மோடிக்கு சொந்தமான இடங்கள், கடைகள், அலுவலகங்களில், அமலாக்கத் துறை மற்றும், சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி சொத்துகளை கைப்பற்றி வருகின்றனர்.

மியூச்சுவல் பண்டு, பங்குகளில் நிரவ் மோடியும், சோக்சியும் முதலீடு செய்திருந்த 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.

நிரவ் மோடி மற்றும் அவரது நிறுவனத்திற்கு சொந்தமான 9 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கீதாஞ்சலி நிறுவனத்திற்கு சொந்தமான ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.