லண்டன்
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் கைதான நிரவ் மோடியின் காவலை ஜூன் 27 வரை லண்டன் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி மோசடி செய்தார். சிபிஐ நடவடிக்கைக்கு பயந்து அவர் தனது பங்குதாரர் மற்றும் குடும்பத்தினருடன் நாட்டை விட்டே ஓடி விட்டார். அவரை பல நாடுகளிலும் இந்திய அரசு தேடி வந்தது. அவர் லண்டனில் குடி ஏறி உள்ளது வெளியான பிறகு அவர் லண்டனில் இண்டர்போல் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய அரசு லண்டன் நீதிமன்றாத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தற்போது நிரவ் மோடி லண்டன் நகரின் தென்மேற்கில் உள்ள சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். தமக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் என நிரவ் மோடி தாக்கல் செய்த மூன்றாவது மனுவையும் லண்டன் நீதிமன்றம் இம்மாதம் 8 ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
தனக்கு சிறைச்சாலையின் வசதிகள் மோசமாக உள்ளதாகவும் ஜாமின் தொகையாக எவ்வளவு விதித்தாலும் அளிக்க தயாராக உள்ளதாகவும் நிரவ் மோடி தரப்பில் தெரிவிக்கபட்டது. இன்றைய விசாரணையின் போது லண்டன் நீதிமன்ற நீதிபதிகள் நிரவ் மோடியின் காவலை வரும் ஜூன் 27 வரை நீட்டித்து உத்தரவிடனர். அத்துடன் அவரை நாடு கடுத்தும் வழக்கின் விசாரணையை ஜுன் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.