லன்டன்:
சாட்சிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், லன்டனில் கைது செய்யப்பட்ட இந்தியாவை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடிக்கு லன்டன் நீதிமன்றம் 2வது முறையாக ஜாமின் மறுத்து உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியிடமிருந்து 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டு வந்த குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று தலைமறைவானார். அவரை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடியது இந்தியா.
இந்த நிலையில், கடந்த சிலநாட்களுக்கு முன்பு, லன்டனில் அவர் நடமாடும் வீடியோ வெளி யானது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஸ்காட்லாந்து போலீசார் நீரவ் மோடியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கிடையில், நீரவ் மோடியின் ஜாமீனுக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பிக்க இந்திய அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் லண்டனுக்கு சென்றுள்ளனர்.
நீரவ் மோடியின் ஜாமீன் மனு லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இந்தியாவின் சார்பில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜராகினர்.
விசாரணையின்போத, நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளின் கண் காணிப்புடன் கூடிய தொலைபேசியைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும், நிரவ் மோடி கடந்த 2018ம் ஆண்டு முதல் லண்டனில் நடமாடி வருவதாகவும் அவர் எங்கேயும் ஓடி ஒளிய வில்லை என்றும் வாதிடப்பட்டது.
அப்போது இந்தியா சார்பில் வாதாடிய வழக்கறிஞர், நீரவ் மோடி சாட்சிகளை விலைகொடுத்து வாங்க முயற்சித்தாகவும், சில சாட்சிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், நீரவ்மோடிக்கு ஜாமீன் அளித்தால் சாட்சியங்களை அழித்துவிடுவார் என்றும் கூறப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வெஸ்ட் மினிஸ்டர் மாஜிஸ்ட்ரேட் அருபுத் நாட், நீரவ் மோடி யின் ஜாமீன் மனுவை நிராகரித்தார். வழக்கு விசாரணை 26ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, நீரவ் மோடி இந்தியா அழைத்துச் செல்லப் பட்டால் எந்த சிறையில் அடைக்கப்படுவார் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த இந்திய அதிகாரிகள் ஏற்கனவே விஜய் மல்லையாவுக்காக மும்பையில் சிறைச்சாலை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிறையில் நீரவ் மோடியை அடைப்போம் என்று தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து கருத்துதெரிவித்த நீதிபதி, தான் ஏற்கனவே விஜய் மல்லயா விசாரணையின் போது அந்த சிறை வீடியோவை பார்த்ததாக தெரிவித்தவர், அந்த சிறையில் இருவருக்கும் போதுமான இடம் இருக்கிறது என்று கூறினார். இதன் காரணமாக நிதிமன்றத்தில் சிரிப்பலைகள் எழுந்தன.