டில்லி
கொரோனா பாதிப்பையொட்டி வங்கிகளில் சேவைக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
வங்கிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் செலுத்த மற்றும் பணம் எடுக்க கட்டணம் விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
இதற்கு முன்பு இவை இலவச சேவைகளாக இருந்தன.
இதையொட்டி பாங்க் ஆஃப் பரோடாவில் நவம்பர் 1 முதல் இக்கட்டணம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் சில வங்கிகளும் சேவைக் கட்டனங்களை உயர்த்த உள்ளதாக தக்வல்கள் வெளியாகின.
இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு உண்டானது
இதையொட்டி மத்திய நிதி அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில்
”கொரோனா பாதிப்பையொட்டி வங்கிகளில் சேவை கட்டணத்தை உயர்த்த அரசு விரும்பவில்லை
பாங்க் ஆஃப் பரோடாவில் இயந்திரம் மூலம் பணம் செலுத்தவும் எடுக்கவும் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அதுவும் நீக்கப்பட்டுள்ளது.
சேமிப்பு கணக்குகளுக்கு சேவை கட்டண உயர்வு கிடையாது.
அவ்வாறு விரைவில் உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை”
என் அறிவிக்கப்பட்டுள்ளது.