அபுஜா:
நைஜீரியாவில் டிரக் -கார்கள் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

நைஜீரியாவின் தம்பட்டா உள்ளூர் அரசாங்கப் பகுதியின் குனார் டுமாவா கிராமத்தில் ஒரு லாரி மற்றும் இரண்டு கார்கள் விபத்துக்குள்ளானதாக கனோவில் உள்ள பெடரல் சாலை பாதுகாப்புப் படையின் தளபதி சுபைரு மாடோ தெரிவித்தார்.

ஒரு வாகனத்தில் பிரேக் செயலிழந்ததாலும், வாகனத்தின் ஓட்டுநர் அதிவேகமாக வாகனம் ஒட்டியதாலும் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில், மூன்று ஆண்கள், ஆறு பெண்கள் என்றும், 41 பேர் பலத்த காயம் அடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நைஜீரியாவில் அதிக சுமை, மோசமான சாலை மற்றும் பொறுப்பற்ற வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.