கொலம்பியாவில் படகு நீரில் முழ்கி விபத்து! 150 பேர் பலி?

போகோடா:

கொலம்பியா நாட்டில் 150 சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற படகு நீரில் முழ்கி விபத்துக்குள்ளானது.

இதுவரை அதில் பயணம் செய்த 9 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், படகில் பயணம் செய்தவர்கள்  அனைவரும் பலியாகி இருக்கக்கூடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த படகில் பயணம் செய்தவர்கள் நிலைமை கேள்விக்குறியாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. நீரில் மூழ்க்கியவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு கப்பல்படை, விமானப்படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கொலம்பியாவில் குவாடேப் நீர்தேக்கத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இந்த சோக விபத்தில் அதில் பயணம் செய்த சுற்றுப்பயணிகள் அனைவரும் தண்ணீரில் மூழ்கினர்.

இதுவரை 9 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பயணிகளை உயிருடன் மீட்க முயற்சித்து வருவதாக கொலம்பிநாட்டுஅரசு கூறி உள்ளது.

படகு முழ்கியதற்கான காரணங்கள் குறித்து விசாரிக்கப்படுவதாகவும்,  படகில் சென்ற பெரும்பாலானோர் பலியாகியிருக்க கூடும் எனவும் கூறப்படுகிறது.

நேற்று விடுமுறை தினமாகையால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதைத்தொடர்ந்து 150 பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய படகில் 170க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த தினால் இந்த படகு பாரம் தாங்காமல் மூழ்க்கியிருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.


English Summary
Nine Dead After Boat Carrying 150 People Sinks in Colombia