தமிழில் மிகப் பழங்காலத்திலிருந்தே கிறித்துவ இலக்கியங்கள் உள்ளன. அவ்வாறு தமிழில் முதலில் 1578 ஆம் வருடம் வெளியான நாடகத்தின் பெயர் தம்பியான் வணக்கம். கிறித்துவ சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட நாடகங்களுக்கு அதிகம் வரவேற்பில்லாததால், அந்த நாடகம் 1900 களில் எப்போதாவது மேடை ஏற்றப்பட்டுவந்தது. அதைப் போல் மற்றொரு நாடகம் தான் ஞான சவுந்தரி. இந்நாடகம் கன்னி மேரியை வழிபடும் பக்தையான ஒரு கிறித்துவ இளவரசியைப் பற்றியதாகும்.
ஞானசவுந்தரி என்பது ஒரு மாற்றாந்தாயால் கொடுமைப்படுத்தப்பட்டு கைகள் வெட்டப்பட்டு காட்டில் விடப்பட்ட ஒரு இளவரசியின் நாட்டுப்புறக் கதை ஆகும். இடைவேளைக்கு முன்பு அந்த அழகிய இளவரசி மேரி மாதாவால் காப்பாற்றப்பட்டு கைகளை மீண்டும் பெறுவாள்.
1930களில் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளைக்கு மிகவும் பிடித்த நாடகமாக ஞான சவுந்தரி இருந்தது. ஞானசவுந்தரியின் கைகள் வெட்டப்படுவதும் அதன் பிறகு கடவுளின் ஆசியால் அவளுக்கு மீண்டும் கைகள் வருவதும் தந்திரக் காட்சி மூலம் காட்டப்பட்டது. அது ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அப்போது பிறந்த நூற்றுக்கணக்கான தமிழ் குழந்தைகளுக்கு ஞானசவுந்தரி எனப் பெயர் சூட்டப்பட்டது.
கிறித்துவர்களின் பட நிறுவனமான சிட்டாடல் ஸ்டூடியோவால் கடந்த 1948 ஆம் வருடம் ஞானசவுந்தரி படமாக்கப்பட்டு வெளியாகத் தயாராக இருந்தது. அப்போது ஜெமினி ஸ்டூடியோவும் ஞானசவுந்தரியை படமாக்க முடிவு செய்தது. ஜெமினி ஸ்டூடியோ அதிகாரிகள், தங்கள்
முதலாளி எஸ் எஸ் வாசனிடம் தங்கள் ஸ்டூடியோவின் பெயரும் மற்றும் படமாக்கும் திறனும் இப்படத்தை நிச்சயம் வெற்றி அடையச் செய்யும் என உறுதி அளித்தனர்.
கொத்தமங்கலம் சுப்பு உள்ளிட்ட ஜெமினியின் அனைத்து கதாசிரியர்களும் தமிழ் பிராமண கலாச்சாரத்தில் இருந்து வந்தவர்கள். அதனால் அவர்களுக்கும் உண்மைத் தன்மைக்கும் இடையில் பெரிய இடைவெளி இருந்தது. முதலாவதாகக் கதாநாயகி கிறித்துவப் பெண் என்பதால்
நெற்றியில் குங்குமப் பொட்டு வைக்க முடியாது என்பது அவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. தமிழக பிராமண கலவரத்தின்படி பொட்டு வைக்காதவள் விதவை எனவும் விதவை என்பது அபசகுனம் என்பதும் முக்கிய நம்பிக்கை ஆகும். இருந்தாலும் சினிமாத்தனமான ஒரு அடிப்படையில்
அவர்கள் கதாநாயகியின் நெற்றியில் ஒரு சிலுவையை வரையலாம் என அசட்டுத்தனமான ஒரு முடிவு எடுத்தனர். அத்துடன் கிறித்துவ கதையில் வசனங்களும் பிராமண மொழியில் எழுதப்பட்டுப் பாழ் செய்யப்பட்டிருந்தது.
இதனால் வெறுப்படைந்த ரசிகர்கள் ரகளையைத் தொடங்கினர். கன்னி மேரி தனது வசனங்களை மைலாப்பூர் பெண் போலப் பேசுவதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இடைவேளைக்குப் பிறகு திரையரங்கில் வன்முறை வெடித்தது. நாற்காலிகள் உடைக்கப்பட்டன. திரையைக் கிழிக்கவும் முயற்சிகள் நடந்ததால் அனைத்து காட்சிகளும் நிறுத்தப்பட்டன.
மூன்று நாட்களாகியும் கலவரம் குறையாததால் ஜெமினி அதிகாரிகளும், திரையரங்கு உரிமையாளர்களும் எஸ் எஸ் வாசனை அணுகினர். வாசன் எப்போதும் குறைகளுக்குச் செவி கொடுப்பவர். அவரும் நடந்ததை கேட்டுத் திகிலடைந்தார். பிறகு, அவர் ஒரு நல்ல முடிவு எடுத்தார். அவர் தாம் இப்படி
ரசிகர்களால் ஒப்புக் கொள்ள இயலாத அளவுக்கு படம் ஒன்றை எடுத்ததை மக்களும் அவர் ஊழியர்களும் மறந்து விடவேண்டும் என நினைத்தார். அவர் உடனடியாக திரையரங்க உரிமையாளர்களிடம் படச் சுருளை தன்னிடம் திருப்பி ஒப்படைக்கக் கோரினார். அவர் அந்த சுருள்களை மட்டுமின்றி நெகடிவையும் ரகசியமாக எரித்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில வருடங்களுக்குப் பிறகு வாசன் நடத்திய ஆனந்த விகடன் பத்திரிகை கல்கி மற்றும் குமுதம் பத்திரிகைகளை விட பின்னடைந்து இருந்த போது அவர் பிராமண மொழி தம் தோல்விக்குக் காரணம் என உணர்ந்தார். அதனால் அவர் நடனக் கலை வகுப்பினரைச் சேர்ந்தவர்களின் வாழ்கையை
அடிப்படையாகக் கொண்ட ஒரு தொடரைக் கொண்டு வர முடிவு செய்தார். முன்பு ஞானசவுந்தரியில் கலாச்சார தவறு செய்த கொத்தமங்கலம் சுப்புவிடம் அதே பொறுப்பை அளித்தார்.
தில்லானா மோகனாம்பாள் என்னும் அந்த தொடர் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றாக அமைந்தது.
-வெங்கடேஷ்