பிரபல திபெத் மதகுரு “டென்சின் டெலெக் ரின்போச்”.

 இவர்மீது 2002ம் ஆண்டு செங்குடுவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் மற்றும் பல்வேறு தீவிரவாத குற்றங்களில் தொடர்புடையதாகவும், தனிநாடு கொள்கைகளுக்காகவும் மதகுரு டென்சினுக்கு சீன நீதிமன்றம் முதலில் மரண தண்டனை விதித்தது. அவர் தான் குற்றமற்றவர் என்று மேல்முறையிட்டபோது அவரை விடுவிக்காமல் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது.

tibet
கடந்த ஆண்டு 2015- ஜூலையில், சிறைச்சாலையில் மதகுரு மாரடைப்பால் மரணமடைந்தார் எனச் சீன அரசு அறிவித்தது.

மரணத்தில் சர்ச்சை:

மதகுருவின் சகோதரி “டோல்கர்” :   கடந்த ஆண்டு மதகுருவின் ஈமச்சடங்கை தள்ளிப்போடும்படி கோரியதை சீன அரசு நிராகரித்துவிட்டது.

 

இது நடந்து ஓராண்டாடு முடிந்தநிலையில்  அவரது மரணம் குறித்து சர்ச்சை கிளம்பியுள்ளது.
தற்போது சீனாவை விட்டுத் தப்பித்து வந்த அவரது உறவினர் “மதகுரு” மாரடைப்பால் இறக்கவில்லை. சிறையில் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார் எனப் பகீர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சீனாவிலிருந்து தப்பி இந்தியாவில் அடைக்கலம் கோரியுள்ள அவரது சகோதரி மகள் நியிமா ஹாமோ, (வயது 26) நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.
அவர் பத்திரிக்கையாளர் குழுவிடன்  ” தனது மாமா திபெத் மதகுரு “டென்சின்” சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது உண்மை என்று அவர் தெரிவித்துள்ளார்.
சிறையில் இருக்கும்போது தனது தாய் “டோல்கர்”, மதகுரு டென்சினை சந்திக்கும் போதெல்லாம், அவர் எவ்வாறு சித்ரவதைப் படுத்தப்படுவதை தாயிடம் பலமுறை  கதறி அழுதுள்ளார் . மேலும், சிறை அதிகாரிகள் மதகுருவிடம் உன்னுடைய கடவுள் சக்தியைக் காட்டு என அடித்தும் பட்டினி போட்டும் கொடுமைபடுத்தியதாக தன் தாயிடம் கூறியுள்ளாரெனக் கூறினார்.

” கடந்த வருடம் 2015- ஜூலையில் மதகுரு மாரடைப்பால் இறந்ததாகச் சிறை அதிகாரிகள் இவரது குடும்பத்தாரிடம் தெரிவித்தனர். அவரது சடலத்தைப் பார்க்கவும் அனுமதி மறுத்தனர்.  திபெத்தியர் வழக்கப்படி அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதிக்கவில்லை. மதகுரு இறந்த செய்தியை வெளியில் யாருக்கும் சொல்லிவிடாமல் இருக்க மதகுரு குடும்பத்தினரை இரண்டு வாரங்கள் வீட்டுச் சிறையில் அடைத்தது சீனக் காவல்துறை.

நியிமா தனது மாமாவின் உடலைக் காட்டாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாகப் போராட்டம் நடத்திய பிறகே அவரது உடலைக் காண அனுமதித்தனர். அவரது சடலத்தை பார்த்தபோது, அவரது உதடுகள் கால் நகங்களும் கறுப்பாய் நிறம் மாறி இருந்தது. அவரது பின்னந்தலையில் படுகாயம் இருந்தது. அவரது பிரேத பரிசோதனை அறிக்கையைக் குடும்பத்தாருக்கு வழங்க வில்லை.  எனவே அவரது மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்தப் பட வேண்டும். எங்களுக்குச் சீன அரசுமீது நம்பிக்கை இல்லை” என்றார்.

நீதி வேண்டி நீண்டப் பயணம்:
இந்த உண்மையை உலகுக்கு தெரியப்படுத்த விரும்பினார் நியிமா ஹாமோ. இதற்காக கடத்தல்காரர்களிடம் ரூபாய்  6.5 லட்சம் கொடுத்து இந்தியா வர உதவி கோரினார். தனது வயதான தாயார் மற்றும் 6 வயது மகளைத் தனியாய் விட்டு  சீனாவில் இருந்து புறப்பட்டார்.  நேபாளம் வழியாக, தரைவழியாய் இரண்டு வாரங்கள் பயணம் செய்து தரம்சாலாவை வந்தடைந்தார்.

தரம்சாலாவில் தான் திபெத்திய புத்தத் துறவி தலாய்லாமா தங்கி இருக்கின்றார்.


இவரது குற்றச்சாட்டுகளுக்குரிய பதில் அளிக்கச் சீன அரசு அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
சிச்சுவான் பத்திரிக்கையாளர் குழுவும் இதுவரை பதில் அளிக்கவில்லை.
செங்குடு காவல்நிலையத்தை தொடர்பு கொண்டபோது, கடமையில் இருந்த காவலர் “இந்த வழக்கு குறித்த விவரம் தமக்கு தெரியாது” என்று பதிலளித்து தொடர்பை துண்டித்துவிட்டார்.