புற்றுநோய்  குறித்து சமீபத்தில் சிகாக்கோ நடத்திய ஆய்வில் NHS வகை புற்றுநோயால்  பாதிக்கப்பட்டவர்களை கண்டறியப்பட்டு கண்காணிப்பதில்  தோல்வியே ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நோயால் பாதிக்கப்பட்டவர்களை முறையாக பராமரித்தால் அவர்களின் வாழ்நாட்களை நீட்டிக்கலாம் என ஆராய்ச்சி கூறுகிறது.  சிகாகோவில் உள்ள அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சிலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், NHS வகை புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையாக கவனிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

டெக்சாஸில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி பிரிவை சேர்ந்த மருத்துவர் ராபர்ட் டூட், இவ்வகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  முறையாக சிகிச்சைகள் அளித்து கவனித்து வந்தால் அவர்களின் வாழ்நாட்களை அதிகப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். நோயாளிகள் பராமரிக்கப்படுவதை தவறவிட்டால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை இழக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களை விட நோயாளிகளின் இறப்பை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் 68 சதவிகிதத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இந்த ஆய்வின் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை நோய் பாதிப்பின் தன்மையை கொண்டு குழுவாக பிரித்து கண்கானிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் கண்காணிப்பு காலம் ஒரு மாதத்தில் இருந்து 21  ஆண்டுகள் வரை நீடிக்க கூடியது. சாதாரணமாக புற்றுநோயின் வீரியம் 9 ஆண்டுகளில் தெரிய வரும் எனவும், பெருங்குடல் மற்றும் நுரையீரல் புற்றுநோயின் வீரியம் 7 ஆண்டுகள் எனவும்,  மார்பக புற்று நோய் ஓராண்டில் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வு கூறுகிறது.

நோய்களின் தொற்று அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் முழு பராமரிப்பில் இருக்க வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்தனர்