
டில்லி
அமர்நாத் கோவில் அருகே மட்டும் அமைதி காக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தனது உத்தரவுக்கு விளக்கம் அளித்துள்ளது.
அமர்நாத் யாத்திரை செல்லும் பயணிகள் யாத்திரையின் போது எந்த ஒரு மந்திரம் ஜபிப்பதோ, ஜெய கோஷங்கள் இடுவதோ தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு முழு அமைதி கடைபிடிக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியகின. இதைத் தொடர்ந்து நாடெங்கும் பரபரப்பு உண்டாகியது.
தற்போது தனது உத்தரவுக்கு தீர்ப்பாயம் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், “மலை முழுவதும் அமைதி காக்க வேண்டும் என சொல்லப்படவில்லை. சிவலிங்கம் அமைந்துள்ள குகைக்கோயிலின் முன்பும் கோயில் வளாகத்திலும் தான் அமைதி காக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கியூ வரிசையில் ஒருவர் பின் ஒருவராக செல்ல வேண்டும் என்னும் உத்தரவில் மாறுதல் இல்லை” என அறிவிக்கப் பட்டுள்ளது.
[youtube-feed feed=1]