ரியாத்:
உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் நெய்மர் . பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவர் பிரேசில் தேசிய அணிக்காக சர்வதேச கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் அல் ஹிலால் கால்பந்து கிளபிற்காக 2 ஆண்டுகள் விளையாட இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
31 வயதான நெய்மர் கடந்த 6 ஆண்டுகளாக பிரான்ஸின் பி.எஸ்.ஜி. அணிக்காக விளையாடி வந்தார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு அவரை அல் ஹிலால் கிளப் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்காக அவருக்கு இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய் வழங்கவும், அவரை விடுவிப்பதற்காக பி.எஸ்.ஜி. கிளப்பிற்கு ரூ.908 கோடி வழங்கவும் அல்-ஹிலால் சம்மதம் தெரிவித்துள்ளது.