டில்லி,
தலைநகர் டில்லியின் ஜந்தர்மந்திரில் கடந்த 100 நாட்களாக நடைபெற்று வந்த தமிழக விவசாயிகள் போராட்டம் முடிவடைந்தது. அதையடுத்து அவர்கள் தமிழகம் திரும்பினார்கள்.
இந்நிலையில் அடுத்த மாதம் 20, 23ந்தேதிகளில் நாடு முழுவதும் இருந்து 5 லட்சம் விவசாயிகள் கலந்துகொள்ளும் பாராளுமன்ற முற்றைகை போராட்டம் நடைபெற்றும் என்றும் அய்யக்கண்ணு கூறினார்.
விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்பட பர்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டில்லி ஜந்தர்மந்திர் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வந்தார்கள்.
இந்த போராட்டம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த ஜூலை மாதம் 16ந்தேதி முதல் நடைபெற்று வந்தது. போராட்டம் நேற்றோடு 100வது நாளை எட்டியது.
நேற்றைய போராட்டத்தின்போது, கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு, ‘விவசாயிகள் கழுத்தை அறுக்காதீர்கள்’ என்று கோஷமிட்டு ஊர்வலமாக சென்றனர்.
அதைத்தொடர்ந்து நேற்றுடன் போராட்டத்தை முடித்துக்கொண்ட தமிழக விவசாயிகள் நேற்று இரவு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு புறப்பட்டனர். இன்று பிற்பகல் சென்னை வருகிறர்கள்.
இதுகுறித்து தலைவர் அய்யாக்கண்ணு கூறும்போது, , ‘இந்த ஆண்டில் மொத்தம் 141 நாட்கள் போராட்டம் நடத்தினோம். ஆனாலும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவில்லை அதைத்தொடர்ந்து. அடுத்த மாதம் 20, 23-ந்தேதிகளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில விவசாயிகள் கலந்துகொள்ளும் பாராளுமன்றத்தை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்டத்தில் 5 லட்சம் விவசாயிகள் பங்கேற்க இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.