பெங்களூரு

ர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரத்தை அடுத்து  சீக்கியர்களின் தலைப்பாகை குறித்த அடுத்த சர்ச்சை தொடங்கி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என இந்துத்துவ மாணவர்கள் வலியுறுத்தினர்.   இதையொட்டி கர்நாடக அரசு மத ரீதியான உடைகளை அணிந்து கல்வி நிலையங்களுக்கு மாணாக்கர்கள் வரத் தடை விதித்தது.   இதை எதிர்த்து மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உச்சநீதிமன்றம் இது குறித்து முடிவுக்கு வரும் வரை மதரீதியான உடைகளை மாணவர்கள் கல்வி நிலையத்துக்கு அணிந்து வரக் கூடாது என தெரிவித்துள்ளது.  இந்நிலையில் பெங்களூருவில் உள்ள மவுண்ட் கார்மேல் கல்லூரியில் பயிலும் சீக்கிய மாணவியை தலைப்பாகையை அகற்ற வேண்டும் என நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது. 

அந்த மாணவி தற்போது கல்லூரிக்குச் செல்லவில்லை.   அவரது தந்தை தனது மகள் சீக்கிய முறைப்படி புனித நீராட்டு பெற்றுள்ளதால் ஆண்களைப் போல் தலைப்பாகை அணிவது மரபு எனவும் நீதிமன்றம் காவித்துண்டு, ஹிஜாப் ஆகியவற்றுக்கு மட்டுமே தடை விதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.  மேலும் அவர் இந்த விவகாரத்தைக் கர்நாடக உயர்நீதிமன்ற கவனத்துக்குக் கொண்டு செல்ல உள்ளதாகக் கூறி உள்ளார்.