நியூஸ்பாண்ட்:
ராஜ்யசபை எம்.பி.க்களான  தி.மு.க.வைச் சேர்ந்த திருச்சி சிவாவுக்கும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த சசிகலா புஷ்பாவுக்கும் நடந்த கைகலப்புதான் இன்னமும் வட இந்தியாவில் டாக் ஆக இருக்கிறது.
இரு எம்.பிக்களிடையே இப்படி ஓர்   ரணகளம் நடந்ததை வட இந்திய மீடியாவால் ஜீரணிக்கவே முடியவில்லை. இதையடுத்து சசிகலா புஷ்பாவின் பூர்வீகத்தை ஆராய ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்கள்.
படிக்கும் காலத்திலேயே சசிகலா புஷ்பாவின் “சுதந்திர” பறவையாகவே வலம் வந்திருக்கிறார்.  தூத்துக்குடி மேயராக ஆன பிறகும் தனது “சுதந்திர” நடவடிக்கைகளை இவர் மாற்றிக்கொள்ளவில்லை. அதனால் பலவித சர்ச்சை பேச்சுக்கு ஆளானார். குறிப்பாக சொல்வதென்றால், இரு பெண் கவுன்சிலர்களை அழைத்துக்கொண்டு கொடைக்கானலுக்கு சென்றுவந்தது விவகாரமாக வெடித்தது.

நியூஸ்பாண்ட்
நியூஸ்பாண்ட்

அடுத்து,  தூத்துக்குடி தொழிலதிபரிடம் சசிகலா புஷ்பா பேசிய ஆடியோ, வாட்ஸ்அப்பில் தீயாய் பரவியது. மீண்டும் சர்ச்சை.  இதையடுத்து அவரிடம் இருந்த மகளிர் அணி செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
அதற்கு அடுத்து,  திருச்சி சிவாவுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின.  அ.தி.மு.க. மேலிடம், அப்போதே  அவரிடம் ராஜினாமா கடிதத்தை எழுதி வாங்கிவிட்டது.
இப்போது திருச்சி சிவா பக்கம் வருவோம்.
மிகச்சிறந்த பேச்சாளர், நாடாளுமன்றத்தில் பல முக்கிய விசயங்களைக் குறித்து பேசி கவனத்தை ஈர்த்தவர். குறிப்பாக, 45 ஆண்டுகளுக்குப் பிறகு திருநங்கைகளுக்காக  இவர் கொண்டுவந்த தனி நபர் மசோதா  நிறைவேறியது. கட்சி பேதமின்றி பலரும் இவரை பாராட்டினார்கள்.
ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை முறை,  பாராட்டும்படியாக இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே இவருக்கும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவுக்குமான நட்பு, சர்ச்சை செய்தியாக உலா வந்தது.
இதே போல சசிகலா புஷ்பாவிடமும் கட்சி மாச்சரியங்களைக் கடந்து நெருக்கமாக பழகினார் சிவா என்கிறார்கள்.
திருச்சி சிவா இல்லத்தின் திருமண செலவில் பாதியை சசிகலா புஷ்பா ஏற்றிருந்தார் என்றும், அந்த பண விவகாரத்தின் விளைவே ஏர்போர்ட் அடிதடி என்றும் ஒரு தகவல் உலவுகிறது.
அதே போல வெண்ணிற ஆடை நிர்மலாவுடனான திருச்சி சிவாவின் நட்பு, சசிகலா புஷ்பாவுக்கு பிடிக்கவில்லை.. அதனாலேயே அடிதடி என்று ஒரு தகலும் பரவிக்கிடக்கிறது.
மூன்றாவதாக  வேறொரு கோணமும் உலவுகிறது.
“சிவா, ச.புஷ்பா இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது அல்லவா. அதை மார்பிங் படம் என்று இவர்கள் கூறினார்கள். ஆனால் அவற்றில் சில ஒரிஜினல் படங்கள்தான். இதனால் சசிகலா புஷ்பாவிடம் ராஜினாமா கடிதத்தை மேலிடம் வாங்கி வைத்துவிட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும், சசிகலா புஷ்பாவுக்கு ஏதும் பணிகள் வழங்கப்படவில்லை.
இந்த சூழலில் சிவாவும், சசிகலா புஷ்பாவும் சேர்ந்து நடத்திய நாடகம்தான் ஏர்போட் விவகாரம்.
“திமுக எம்.பியை அடித்தால், தனது கட்சித் தலைவியான ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்கிவிடலாம்” என்று நினைத்து சசிகலா புஷ்பா செயல்பட்டார். அதற்கு திருச்சி சிவாவும் ஒத்துழைத்தார்.
ஆனால் இவர்களது நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்துவந்த மேலிடம், இது நாடகம் என்பதை அறிந்துகொண்டது. அதனால்தான் சசிகலா புஷ்பாவை கட்சியில் இருந்து நீக்கியது” என்றும் சொல்கிறார்கள்.
அடுத்த தகவல்…
சிவாவின் மனைவி தேவிகாராணி, கடந்த 2014  ஆகஸ்ட் 2ம் தேதி மறைந்தார். அவரது இரண்டாவது நினைவு தினத்துக்காக டில்லியில் இருந்து சென்னைக்கு  சிவா கிளம்ப.. அது சசிகலா புஷ்பாவுக்கு பிடிக்காமல் போக.. விளைவு, அந்த அடிதடி என்கிறார்கள்.
“இருக்கிற என்னைவிட இல்லாத உன் பெண்டாட்டி ரொம்ப முக்கியமா” என்று கேட்டு கேட்டு, திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா அடித்தாராம். இது ஏர்போர்ட் கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகியிருக்கிறதாம்.
இந்த விவகாரத்தில்  சசிகலா புஷ்பாமீது அவரது கட்சி நடவடிக்கை எடுத்துவிட்டது. திருச்சி சிவாமீது அவரது (தி.மு.க.) தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும், கடும் அதிருப்தியில் இருக்கிறது. அதனால்தான் ஏர்போர்ட் சம்பவம் குறித்து கட்சி சார்பாக எந்தவித கருத்தும் வெளியாகவில்லை.  சிவாவும், “அந்த விசயத்தை விடுங்க” என்றே பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துவருகிறார்.
சசிகலா புஷ்பா - திருச்சி சிவா
சசிகலா புஷ்பா – திருச்சி சிவா

இதற்கிடையே ஒரு ஆச்சரிய தகவல் டில்லியில் உலவுகிறது.
அடிதடிக்கு பிறகு திருச்சி சிவா, சசிகலா புஷ்பா இருவருமே தங்களது பயணத்தை கேன்சல் செய்துவிட்டு ஏர்போட்டிலிருந்து வெளியேறினார்கள்.
ஆனால், “அதன் பிறகு மாலை அவர்கள் இருவரும் சந்தித்தார்கள்.  டில்லிக்கு வெளியில் உள்ள ஒரு கெஸ்ட் ஹவுஸில் நடந்த அந்த சந்திப்பு மிக உருக்கமாக இருந்ததாம்” என்று சொல்கிறது டில்லி மீடியா வட்டாரம்.
இதையெல்லாம் விட ஹாட் ஆக பேசப்படும் இன்னொரு விஷயமும் உண்டு.
ஏர்போர்ட் அடிதடி பற்றி விசாரிக்க, மேலிடம் உத்தரவிட…   ரகளையின் கண்காணிப்பு வீடியோ பதிவை உள்துறை அதிகாரிகள்  வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.
இது தொடர்பான விசாரணை தொடர்ந்தால் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகக்கூடும்.
மொத்தத்தில் இந்த ஏர்போட் சம்பவம், இந்திய ஜனநாயகத்துக்கு மேலும் ஒரு தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது என்பது நிஜம்.