நியூஸ்பாண்ட்:

குறைவாக வைத்தாலும் தங்கள் பக்கம் 122 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். ஆகவே நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் வெளியில் சொன்னாலும், உள்ளுக்குள் உதறலோடுதான் இருக்கிறார்கள்.

 

கூவத்தூர் நட்சத்திர ஓட்டலில் தங்கவைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்களில் 13 பேர், ஆரம்பத்தில் இருந்தே சசிகலா அணிக்கு அனுசரணையாக இல்லையாம். “எவ்வளவோ” பேசியும் படியவில்லையாம்.

இதனால்தான் புதிய அமைச்சரவை பதவியேற்ற நிகழ்ச்சிக்கு இவர்களை அழைத்துவரவில்லையாம்.

இப்போது இந்த 13 பேரும், “எடப்பாடியை ஆதரிக்கவும் வேணாம். எதிர்க்கவும் வேணாம்” என்று முடிவெடுத்துள்ளார்களாம்.

இதனால், எடப்பாடி தரப்பு, கதிகலங்கி கிடக்கிறது.

“இரவுக்குள் பேசி அவர்களது மனதை மாற்றுங்கள்” என்று அஸைண்மெண்ட் கொடுத்து சிலரை அனுப்பியிருக்கிறாராம் எடப்பாடி.

பார்ப்போம்… என்ன நடக்கிறது என்று!