புதுடெல்லி: இந்திய விமானப்படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக, AH-64E (I) அபாச்சி பாதுகாவல் தாக்குதல் ஹெலிகாப்டர் சேர்க்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அரிஸோனாவிலுள்ள மெசாவில் உள்ள போயிங் தயாரிப்பு நிலையத்தில், முதல் ஹெலிகாப்டர், இந்திய விமானப் படை பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
மொத்தம் ரூ.13,952 கோடிக்கு 22 ஹெலிகாப்டர்களை வாங்கும் ஒப்பந்தம் கடந்த 2015ம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது.
இதனடிப்படையில், வரும் 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மொத்தம் 22 ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும்.
முதல் பிரிவு ஹெலிகாப்டர்கள், வரும் ஜுலை மாதத்தில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விமானப் படை மற்றும் தரைப்படை குழுவினர், இதுதொடர்பாக அமெரிக்காவில் பயிற்சி பெற்றுள்ளனர்.