டெல்லி: 2025 புத்தாண்டு பிறப்பை இந்திய மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில், நியூசிலாந்து நாட்டில் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்திய நேரப்படி மாலை 4.30மணி அளவில் புத்தாண்டு பிறந்தது. இதை அந்நாட்டு மக்கள் வான வேடிக்கையுடன் ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்றனர். முன்னதாக மாலை 3.30 மணிக்கு கிரிட்டிமாட்டி [Kiritimati] தீவில் புத்தாண்டு பிறந்தது.

2025 புத்தாண்டை வரவேற்க உலகம் தயாராகி வருகிறது. பூமி கோள வடிவத்தில் இருப்பதால், அதில் உள்ள உலக நாடுகளிலும், வெவ்வேறு நேரம் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் காரணமாக புத்தாண்டு பிறப்பானது, சில நாடுகளில்  முதலாவதாகவும், சில நாடுகளில்  தாமதமாகவும்  பிறக்கிறது.

ஒருங்கிணைந்த உலகளாவிய நேரத்தை விட நியூசிலாந்து நாட்டின் நேரமானது,  5 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்னதாக உள்ளது (UTC +5:30). அதாவது,   பூமியின் 2025 புத்தாண்டை முதலில் மத்திய பசிபிக் பெருங்கடலில் கிரிபாட்டி குடியரசின் அங்கமான கிரிட்டிமாட்டி [Kiritimati] தீவு இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டை வரவேற்றது.  இதைத் தொடர்ந்து கிரிபாட்டி, டோங்கா மற்றும் சமோவா ஆகியவை 2025 ஆம் ஆண்டு தொடங்கின.

அதைத்தொடர்ந்து 52 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்து நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் 2025 பிறந்துள்ளது.

இந்திய நேரப்படி மாலை 4.30 மணியளவில் அங்கு புத்தாண்டு பிறந்தது. நகரின் மையப்பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டை வரவேற்றனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் விருந்துகள் என அங்கு கொண்டாட்டங்கள் கலை கட்டியுள்ளது.

ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியிலும் புத்தாண்டு கொண்டாட்டத்தில்  மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதைதொடர்ந்து டோக்கியோ, ஜப்பானிலும் புத்தாண்டு பிறந்தது.