ஆக்லாந்து:
லகிலேயே முதலாவது நாடாக நியூசிலாந்தில் 2021 புத்தாண்டு பிறந்தது.

இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாலைகளில் மக்கள் கூடியிருந்தது முழக்கங்களை எழுப்பி 2021-ம் ஆண்டை உற்சாகமாக வரவேற்றனர்.

புத்தாண்டை அந்நாட்டு மக்கள் வானவெடிகளை வெடித்தும், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டும் புத்தாண்டை வெகுச் சிறப்பாக வரவேற்றனர்.

நியூசிலாந்தின் ஆக்லாந்து பகுதியில் உள்ள மக்கள் வானவேடிக்கைகளுடன் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடினர். இதனை தொடர்ந்து இன்னும் சில மணிநேரங்களில் இந்தியாவிலும் 2021-ம் ஆண்டை இந்திய மக்கள் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்தாண்டின் கடைசி நாள் இன்று. இதனால் 2020க்கு மக்கள் குட்பை சொல்லியும், புத்தாண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என 2021-ஐ வரவேற்றும் மக்கள் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் டுவிட்டரில் இந்த விஷயம் தான் டிரெண்டிங்கில் உள்ளது. பெரும்பாலும் #GoodBye2020, #lastdayof2020, #HappyNewYear2021, #Happy2021, #Year2020 ஆகியவை தான் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன.