நியூஸிலாந்து நாட்டில் 2008 க்குப் பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்கவும் பிடிக்கவும் வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் புகையிலை இல்லா தலைமுறையை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நாட்டில் உள்ள 3000 சிகரெட் விற்பனை செய்யப்படும் சூப்பர் மார்க்கெட் மற்றும் சாலையோர கடைகளின் எண்ணிக்கையை 500 ஆக குறைக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள மருத்துவர்கள் இதனால், சிகரெட் பிடிக்கும் பழக்கம் குறைவதோடு நிகோடின் அளவும் குறையும் என்று தெரிவித்துள்ளனர்.

சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை உபயோகிப்பதால் நான்கில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படுவதாக தெரிவித்த அவர்கள், இந்த தடை மூலம் புகையிலை தவிர்த்து வேறு சில அதிக தீங்கு விளைவிக்காத பொருளுக்கு மாற வாய்ப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.