சமூக வலைதளத்தில் பிரபலமான ஆன்லைன் சொல் விளையாட்டு ‘வேர்டல்’.

ஒவ்வொரு நாளும் புதிதாக ஒரு ஐந்தெழுத்து சொல் ஒன்றை ஆறு வாய்ப்புகளில் கண்டுபிடிக்கும் இந்த விளையாட்டை அமெரிக்காவின் மென் பொறியாளர் ஜோஷ் வார்டல் உருவாக்கினார்.

இணையத்தில் இலவசமாக யார் வேண்டுமானாலும் விளையாடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த விளையாட்டு கடந்த அக்டோபர் முதல் வைரலானது.

தற்போது, இந்த கேமிங் சாப்ட்வேரின் பதிப்புரிமையை நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனை கோடிக்கு விற்கப்பட்டது என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை.