
ஃபுளோரிடா: நிலவின் மேற்பரப்பு, ஆய்வாளர்கள் நினைப்பதைவிட அதிகளவு உலோகங்களால் ஆனது என்று புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இதன்மூலம், நிலவின் உருத்தோற்றம் பற்றிய முந்தையக் கருத்துகள் தொடர்பாக பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. நாசாவின் புதிய ஆய்வுக்குழு மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி, நிலவின் மேற்பரப்பில் இரும்பு, டைட்டானியம் போன்ற உலோகங்கள் அதிகளவில் இருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விரிவான ஆய்வு, ஜூலை 1ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த் ஆய்வின் மூலம், பூமி மற்றும் நிலவுக்கு இடையிலான தெளிவான தொடர்பை உணர முடியும் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த ஆய்வின்மூலம் நமக்கு அருகிலுள்ள துணைக்கோளான நிலவின் தோற்றம் மற்றும் சிக்கல்கள் குறித்து அதிகமான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
செவ்வாய் கிரகத்தின் அளவுடைய ஒரு கிரகமும், இளம் புவியும், மோதியதால் உருவான துகள்கள், புவியீர்ப்பு விசையின் மூலம் இணைந்து உருவான ஒன்றுதான் நிலவு என்று இந்த ஆய்வின் விளைவான பல தரவுகள் கூறுகின்றன.
Patrikai.com official YouTube Channel