சென்னை:

ற்போது கோடை விடுமுறை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், பள்ளி மீண்டும் திறக்கும் ஜூன் 3ந்தேதி அனைத்து மாணவ மாணவிகளுக்கும் புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மாணவர்களுக்கான பாடநூல்களை அச்சடித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் வழங்கி வருகிறது. ஆண்டு தோறும் தேவையான அளவிலான பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வருகிறது.

1 முதல் 12 ஆம் வகுப்பிற்கான பாடநூல்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியிலும் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. அதுபோல, 1 முதல் 12 ஆம் வகுப்பிற்கான சிறுபான்மை மொழிப் பாடநூல்கள் (தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் உருது). அச்சடிக்கப்படுகிறது.

மேலும், சமஸ்கிருதம் மற்றும் அராபிக் மொழிப் பாடநூல்கள் 6 முதல் 10 ஆம் வகுப்பிற்கு தேவையான அளவு அச்சடிக்கப்படும் வேளையில்,  1 முதல் 10 ஆம் வகுப்பிற்கு தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் உருது மொழிவழிப் பாடப் புத்தகங்கள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான தொழிற்கல்விக்கான பாடப்புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தற்போது, பாடநூல்கள் அச்சசடிக்கும் பணி முடிவடைந்து, பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக தமிழக பாடநூல் கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஏற்கனவே 9ம் வகுப்பு வரை உள்ளவர்களுக்கு ஏற்கனவே பாடப்புத்தகங்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டது என்று தெரிவித்த அதிகாரிகள், 11 மற்றும்  12ம் வகுப்புகளுக்கு  பாடப்புதங்களை பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருவதாகவும், புதிய பாட புத்தகங்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், ஜூன் 3ந்தேதி பள்ளி திறக்கும் அன்று மாணவ மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.