நியூஸ்பாண்ட்:
நியூஸ்பாண்ட் அனுப்பிய வாட்ஸ்அப் தகவல்:
ஆர்.கே. நகரில் ஆளும் தரப்பு வேட்பாளர், வாக்காளர்களுக்கு அன்பளித்துவிட்டது அனைவருக்கும் தெரிந்த செய்தி. அவருக்கு கிடைத்த ஒத்துழைப்பு, பிரபல சுயேட்சை வேட்பாளருக்குக் கிடைக்கவில்லை.
ஆகவே, “வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்துவிட்டார்கள். தேர்தலுக்குப் பிறகு அதைக் காண்பித்து பணத்தை வாங்கிக்கொள்ளலாம்” என்று ஒரு செய்தி உலவியது. ஆனால் பெரும்பாலான பகுதிகளில் டோக்கனும் கொடுக்க முடியாத நிலை.
ஆகவே அந்த பிரபல சுயேட்சை வேட்பாளரின் ஆதரவாளர்கள் ப்ரஷர் ஏறிய குக்கராய் தவித்துவந்தார்கள். பிறகு கடைசியாக ஒரு ஐடியா தோன்றியிருக்கிறது. .
ஏற்கெனவே 64 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் என்று கீழ்மட்டம் வரை நியமித்து வேலை செய்து வந்தார்கள். இப்போது அந்த பொறுப்பாளர்களை விட்டு, வீட்டுக்கு வீடு, பத்து அல்லது இருபது ரூபாயைக் கொடுத்து வருகிறார்கள். அந்தந்த நோட்டில் இருக்கும் எண்களை பொறுப்பாளர் குறித்து வைத்திருப்பார்.
தேர்தலுக்குப் பிறகு இதைக் காண்பித்து பணத்தை வாங்கிக்கொள்ளலாம்.
பெரும் அளவில் பணத்தை எடுத்துச் சென்று விநியோகிப்பது சிரமமாக இருப்பதால் இந்த புது டெக்னிக்காம். எண்பது சதவிகித பகுதிகளில் இப்படி “ரூபாய் டோக்கன்” கொடுக்கப்பட்டுவிட்டது.
ஆளும் தரப்பு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்திருப்பதால், அதைவிட டபுளாக கொடுக்க வேண்டும் என்று உத்தரவாம். ஆகவே ஓட்டுக்கு 12 ஆயிரம் ரூபாய்.
வாழ்க ஜனநாயகம்.