டெல்லி: பிரிட்டனின் புதிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே பால் தகவல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் கொரோனாவின் புதிய மாற்றம் கொண்ட வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து அந்நாட்டுடனான போக்குவரத்து சேவைகளை உலக நாடுகள் தொடர்ந்து துண்டித்து வருகின்றன.
இந் நிலையில், இங்கிலாந்தின் புதிய கொரோனா வைரஸ் இதுவரை இந்தியாவில் பரவவில்லை என நிதி ஆயோக் உறுப்பினரும், மருத்துவருமான வி.கே பால் தகவல் கூறி உள்ளார். இன்று காலை டெல்லிக்கு வந்த அனைத்து 199 பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகளுக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் எந்த தொற்றும் இல்லை என்று முடிவுகள் கிடைத்துள்ளதாக கூறினார்.
முன்னதாக, பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரசை தொடர்ந்து, மத்திய குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறை அவசரமாக, கூட்டு கண்காணிப்பு குழுக் கூட்டத்தை கூட்டியது, குறிப்பிடத்தக்கது.