இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் துறைமுகத்திற்கோ அல்லது விமான நிலையங்களுக்கோ வந்து சேர்ந்துவிட்ட இந்திய சரக்குகளை சந்தையில் விநியோகிக்க அரசு அனுமதியளிக்க வேண்டுமென அந்நாட்டு பணி வழங்குநர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; காஷ்மீர் விவகாரத்தையடுத்து, இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே கூடுதல் பதற்றம் நிலவுவதால், இரு நாடுகள் தொடர்பான வணிக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதேசமயம், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, பாகிஸ்தானுக்குள் சென்றடைந்துவிட்ட முக்கிய உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்ட சரக்குகளை, விதிமுறைகளை தளர்த்தி விநியோகம் செய்ய அனுமதிக்க வேண்டுமென பாகிஸ்தான் பணி வழங்குநர் கூட்டமைப்பின் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

மாற்று இறக்குமதி ஏற்பாடுகள் செய்யப்படும் வரை இந்த நிலை தொடர வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் துணைத் தலைவர் ஸகி அகமது கான் வெளியிட்ட அறிக்கையின் மூலமாக இந்த வேண்டுகோளை அந்நாட்டு அரசுக்கு விடுத்துள்ளார்.