சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிப்பது தொடர்பாக ‘தமிழ்நாடு கோவிட் 19 ஒழுங்குமுறை விதிகள் 2020’ (Tamilnadu COVID19 Regulations 2020) என்ற பெயரில் புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளது தமிழக அரசு.
COVID19 பாதிப்புக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும்? மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன? மாவட்ட ஆட்சியரின் பணிகள்? போன்றவை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
* ஒரு பகுதியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அந்தப் பகுதியை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பான 8 வழிகாட்டுதல்களைப் பின்பற்ற அறிவுறுத்தல்.
* கொரோனா அறிகுறி உள்ள ரத்த மாதிரிகளை ஆய்வுசெய்ய எந்த தனியார் ஆய்வகத்துக்கும் அனுமதி இல்லை.
* அனைத்து மருத்துவமனைகளும், COVID 19 வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க தனி வார்டுகளை அமைக்க உத்தரவு
* சுகாதாரத் துறை இயக்குனர், துணை இயக்குனர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் அனுமதியில்லாமல், தனி நபர், நிறுவனம் உட்பட யாரும் COVID 19 தொடர்பாக, எந்தவித தகவல்களையும் ஊடகங்களுக்கு அளிக்கக்கூடாது.
* கொரோனா வைரஸ் தொடர்பாக மேற்கொள்ளப்படும் முதல் மற்றும் இரண்டாம் கட்ட உறுதிப்படுத்தல் பரிசோதனைகள், அனைத்துக் குடிமக்களுக்கும் இலவசம்.
நாட்டில் தேவையான அளவிற்கு பரிசோதனை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை அந்த வசதிகளில் மொத்தம் 10% அளவிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.