டெல்லி: ஆப்கன் விவகாரம் குறித்து டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள  பாகிஸ்தானுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள்  கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சொல்லோனா துயரத்துக்கு அளாக உள்ளனர். அங்கு ஏற்பட்டுள்ள சூழல் குறித்து ஏற்கனவே  மத்திய அரசசின் வெளியுறவுத்துறை அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தியது. அதில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் அரசு சார்பில் பங்கேற்று, அங்குள்ள நிலவரம் மற்றும் அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தனர்.

இநத் நிலையில்,  டெல்லியில் வருகிற நவம்பர் மாதத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள  சீனா மற்றும் பாகிஸ்தான் தவிர, ஈரான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் போன்ற பிராந்திய நாடுகளும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளன.  பாகிஸ்தானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்தில் நடைபெற உள்ள இக்கூட்டம் நவம்பர் 10 அல்லது 11ஆம் தேதி நடைபெறலாம் என்றும்,  ஆப்கானில் அமைந்துள்ள புதிய அரசாங்கம், அதன் திட்டங்கள், அங்கு நீடிக்கும் குழப்பம், மக்கள் மீதான அச்சுறுத்தல், அங்கு நிலவும் மனிதாபிமானமற்ற சூழல், உணவு பஞ்சம் உள்பட பல்வேறு சூழல்கள் குறித்து  இநத் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா கூட்டியுள்ள இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் கலந்து கொள்ளப் போவதில்லை என பாகிஸ்தான் என்எஸ்ஏ தெரிவித்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையடுத்து,  வருகிற 20ஆம் தேதி ஆப்கான் விவகாரம் குறித்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை பங்கேற்க ரஷ்யா அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.