டில்லி:
இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாக பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த அதிகாரி முகமது அக்தர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். இந்தியாவின் ராணுவ ரகசியங்களை உளவுபார்த்து பாகிஸ்தானுக்கு தெரிவித்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இவரை டில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் அவரது பெயர் மெஹ்மூத் அக்தர் என்பதும், அவரிடம் ராணுவ தகவல்கள் தொடர்பான ஆவணங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டது.,
இதையடுத்து அவரை சானக்கியபுரி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீரில் எல்லைப்பகுதியில் இருக்கும் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வரும் நிலையில், டெல்லியில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, எல்லைப் பகுதியில் அத்துமீறல் மற்றும் தூதரக அதிகாரி கைது ஆகிய விவகாரங்கள் தொடர்பாக விளக்கம் கோர, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பஷித்திற்கு, மத்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.