சுவிட்சர்லாந்து:

லக அளவில் கொரோனாவின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருகிறது, ஆனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் பல மாதங்களுக்குப் பிறகு கொரோனா வழக்குகளில் உலகளாவிய சரிவு காணப்பட்டதாக நேற்று தெரிவித்துள்ளார், இந்த செய்தி வரவேற்கத்தக்கது என்றாலும் மக்கள் தீவிர எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜெனிவாவில் இருந்து தனது வழக்கமான மாநாட்டின்போது செய்தியாளர்களை சந்தித்தார் உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டெட்ராஸ் அதனோம் கிப்ரியாசிஸ் தெரிவித்துள்ளதாவது: கொரோனா வழக்குகள் திடீரென்று சரிந்து காணப்பட்டாலும் பல நாடுகளில் கொரோனா அதிகரித்து வருகிறது, அதன் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

பல நாடுகளில் விடுமுறை காலம் நெருங்கி வருகிறது, ஆகையால் அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள், குடும்பத்துடன் வீட்டிற்குள் இருப்பது அனைவருக்கும் நல்லது, நம் உயிர் மட்டுமல்லாமல் மற்றவர்கள் உயிருடனும் நாம் விளையாட வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நிச்சயமாக இந்த தொற்று நோய் மக்கள் கொண்டாட்டங்களை மாற்றிவிடும் என்று நான் நம்புகிறேன், உள்ளூர் மற்றும் தேசிய விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும், வீட்டிலேயே தங்கி, கொண்டாட்டத்திற்க்காக முடிந்தால் ஆன்லைன் ஷாப்பிங் செய்யுங்கள். பயணம் மிகவும் அவசியம் என்றால் மட்டுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மேற்கொள்ளுங்கள். ரயில் நிலையங்களிலும், விமான நிலையங்களிலும், பேருந்துகளிலும் கட்டாயம் முகக்கவசத்தை பயன்படுத்துங்கள். சோப்புகள் அல்லது சானிடைசர்களால் அடிக்கடி கைகளை கட்டாயமாக கழுவுங்கள், உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் தயவுசெய்து பயணிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இந்த கொடிய தொற்று நோயை தடுக்க நாம் அனைவரும் நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அதற்கும் மேலாக ஒற்றுமையாக வேலை செய்து கொரோனா வைரசை விரட்ட வேண்டும் என்றும் டெட்ராஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.