டோக்கியோ

புதிய வகை கொரோனா பரவலைத் தடுக்க ஜப்பான் நாட்டில் வெளிநாட்டினர் வர அடுத்த மாத இறுதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

பிரிட்டனில் புதிய வகை கொரோனா தொற்று கண்டு பிடிக்கப்பட்டது.  தற்போது அது பிரிட்டனில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் முந்தைய கொரோனாவை விட 70% வேகமாகப் பரவும் தன்மை உடையது.

இதையொட்டி பிரிட்டனில் பயணிகள் வரவும் இங்கிருந்து செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.    ஆயினும் தற்போது பல உலக நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.   ஜப்பானில் இந்த வைரஸ் தொற்று அதிகமாகக் காணப்படுகிறது.

இதனால் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  அவற்றில் ஒன்றாக ஜப்பான் நாட்டு குடியுரிமை பெறாத வெளிநாட்டினர் ஜப்பானுக்குள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த தடை வரும் ஜனவரி இறுதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.