இந்தியாவில் முதன்முறையாக முழுமையான சிவில் பயணிகள் விமானம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL), ரஷ்யாவின் யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் (UAC) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் திங்களன்று மாஸ்கோவில் கையெழுத்தானது.

SJ-100 ரக விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளது, இவை இரண்டு எஞ்சின் கொண்ட, குறுகிய தூர பயணங்களுக்கு உகந்த விமானமாகும்.

உலகம் முழுவதும் 16க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் 200க்கும் மேற்பட்ட SJ-100 விமானங்களைப் பயன்படுத்தி வருகின்றன.

இந்த ஒத்துழைப்பின் மூலம், இந்திய வாடிக்கையாளர்களுக்காக SJ-100 விமானங்களை தயாரிக்கும் உரிமையை HAL பெற்றுள்ளது. இதனால் சிறிய நகரங்களை மலிவு விலையில் விமான சேவையுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியாவில் முதல் முழுமையான பயணிகள் விமானம் உருவாகிறது. இதற்கு முன்பு HAL தயாரித்த AVRO HS-748 விமானம் 1961 முதல் 1988 வரை தயாரிக்கப்பட்டது.

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து வேகமாக வளர்ந்து வருகிறது. HAL மதிப்பீட்டின்படி, அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவிற்கு 200க்கும் மேற்பட்ட பிராந்திய ஜெட் விமானங்களும், சர்வதேச சுற்றுலா வழித்தடங்களுக்கு மேலும் 350 விமானங்களும் தேவைப்படும் என்று தெரிகிறது.