சென்னை:தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்திற்கு புதிய தலைவராக குறிஞ்சி என்.சிவகுமார் என்பவரை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.
ஈரோட்டைச் சோ்ந்த குறிஞ்சி என்.சிவகுமாா், கட்டுமானப் பொறியாளா் ஆவாா். இவா் ஏற்கெனவே ஈரோடு மாவட்ட கேபிள் டிவி உரிமையாளா்கள் நலச்சங்கத் தலைவராகவும், தமிழ்நாடு கேபிள் டிவி மல்டி சிஸ்டம் ஆபரேட்டா் சங்க மாநில துணைத் தலைவராகவும் உள்ளாா்.

Patrikai.com official YouTube Channel