சென்னை

குஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

கடந்த 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்  படுகொலை செய்யப்பட்டார். இதுவரை 11 பேர் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ள 11 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று காலைய் இந்த 11 பேரில் ஒருவரான திருவேங்கடம் என்பவரிடம் விசாரணை நடத்த மாதவரம் ஏரிக்கரை அருகே காவல்துறையினர் அழைத்து சென்றபோது, திருவேங்கடம் போலீசாரை தாக்கி விட்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளார். என்வே திருவேங்கடத்தை கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் இரண்டு முறை சுட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த என்கவுண்டரில், திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.  மக்க்ளிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அவற்றில் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி சாய்க்கும் பரபரப்பு காட்சிகள் இடம் பெற்றுள்ளன.  காவல்துறையினர் கைதானவர்களே உண்மைக் குற்றவாளிகள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சிசிடிவி ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர்.