சென்னை: மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாராஷ்டிரா போன்று ரவுடிகளை ஒழிக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படும் என்றார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், வன அலுவலகள் 3நாள் மாநாடு முதல்வர் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைசர் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அரசு அறிவித்த பல திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார்.
இன்று நிறைவு நாள் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மகாராஷ்டிரா போன்று தமிழகத்திலும் ரவுடிகளை ஒழிக்க தனிச் சட்டம் கொண்டுவரப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் மத மோத தடுப்பு பிரிவுகள் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கப்படும். குற்றம் புரிவோருக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்க கூடாது என்றும் எச்சரிக்கை செய்தார்.
மேலும், வனப்பரப்பை அதிகப்படுத்துவது, பசுமை சூழலை உருவாக்குவது இன்றைய மனித குலத்திற்கு மட்டுமின்றி வருங்கால தலைமுறைக்கும் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. தற்போது முதன் முறையாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஒன்று சேர்ந்து மாவட்ட வன அலுவலர் மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.