மும்பை
இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் புதிய 500 ரூ நோட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.
நமது நாட்டுக்கான ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருவது தெரிந்ததே, சென்ற மாதம் புதிய ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் மல்கோத்ரா கையெழுத்துடன் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், விரைவில் ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுகள் புதிதாக அச்சடித்து பயன்பாட்டிற்கு விடப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பழைய 10 ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்றும், மகாத்மா காந்தி உருவ தொடரில் வெளியான புழக்கத்தில் உள்ள ரூ.500 நோட்டுகளும் செல்லுபடியாகும் என்றும் கூறி உள்ளது.
விரைவில் வெளியிடப்படும் புதிய ரூபாய் நோட்டுகள், கடந்த டிசம்பர் மாதம் பொறுப்பேற்ற ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுனர் மல்கோத்ராவின் கையெழுத்துடன் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
New Notes,Rs. 500. soon, புதிய நோட்டுகள், று