சென்னை

மீபத்தில் பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் கணபதி லஞ்சம் வாங்கி கைதான விவகாரம் பற்றி நெட்டிசன்கள் பல பதிவு இட்டு வருகின்றனர்.   அதில் நியாண்டர் செல்வன் (NEANDER SELVAN) அவர்களின் முகநூல் பதிவு இதோ :

”பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் கணபதி விவகாரத்தை படிக்கையில் மசாலா சினிமா காட்சிகளை தோற்கடிக்கும் வகையில் பிரமிப்பாக உள்ளது

மனைவி பாத்ரூமை பூட்டிக்கொண்டு ரசாயனம் தடவிய லஞ்சப்பணத்தை டாய்லட்டில் கிழித்து போடுகிறார். போலிஸ் கக்கூஸ் குழாயை உடைத்து லஞ்சப்பணத்தை மீட்கிறது.

நியாண்டர் செல்வன்

ஒருவர் செய்யும் தவறை குடும்பமாக ஊக்குவித்தால் இதுதான் நிலைமை. கணவன் தவறு செய்தால் மனைவி கண்டிப்பதும், மனைவி தவறு செய்தால் கணவன் கண்டிப்பதுமாக இருந்தால் குடும்பம் உருப்படும். ஆனால் இப்ப நிலைமை என்னவென்றால் “அவரெல்லாம் துணைவேந்தரா இருந்து அத்தனை பெரிய பங்களா வாங்கியிருக்கார். நீங்களும் தான் இருக்கீங்களே”னு மனைவியே நல்லா இருக்கும் கணவனையும் லஞ்சம் வாங்க தூண்டுவது போன்ற காட்சிகளை தான் சினிமாக்களில் பார்க்கிறோம்.

இதில் வெளிவந்துள்ள விவகாரம் என்னவென்றால் பேராசிரியர் பதவிக்கான மார்க்கட் ரேட் 30 லட்சம் என்பதே

30 லட்சம் லஞ்சம் கொடுத்து மாதம் 50,000 சம்பளம் என்றே வைத்துக்கொன்டாலும் அசலை திருப்பி எடுக்கவே நாலைந்து வருடம் ஆகுமே? அவர்களும் என்ன ஊழலை செய்து அதை ஷார்ட் டேர்மில் திருப்பி எடுக்க திட்டம் போட்டிருந்தார்களோ என்னவோ?

டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரிய்ர் ஒருவர் “அதுக்கு மதிப்பே இல்லை சார். எம்பில் நாலு வருசம் ரெகுலரா வகுப்புக்கு போயி படிச்சேன். துளி பிரயஜோனம் இல்லை. அதை வெச்சு எந்த வேலையிலும் சேர முடியாது. டாக்டர் பட்டம் வாங்கியும் பயன் இல்லை. அதை வெச்சு பேராசிரியர் வேலைக்கு கூட சேரமுடியாது. அதுக்கு தனியா ஸ்லெட், நெட் எழுதணும். டாக்டர் பட்டம் இருந்தா மாசம் 150 ரூபா இன்க்ரிமெண்ட் கிடைக்கும். அவ்ளோதான். ஆனால் அதுக்கு கைடு கிட்ட அடிமையா இருக்கணும்” என புலம்பினார்.

எல்கேஜியில் சேருவதில் துவங்கும் ஊழல் டாக்டர் பட்டம் வரை தொடர்வது எத்தனை அவமானம்?

உயர்கல்வித்துறையின் பாடி எடுக்கபடுவது எப்போது என சொன்னால் எல்லாரும் போய் அஞ்சலி செலுத்திவிட்டு வரலாம்.”

என பதிந்துள்ளார்.

Photos From Neander Selvan’s Facebook page