மல் – (அண்ணா / அண்ணே / அண்ணாத்தே / அண்ணாச்சி-னு பாசமா ஒன்ன போட்டுக்கங்க) – ஜிக்கு.

ங்களுக்கு மறந்திருக்காது. போன பெப்ருவரி 18-ந் தேதி தமிழ்நாடே அல்லோலகல்லோலப் பட்டுக்கிட்டு இருக்கயில, நீங்க பொங்கியெழுந்து ஒரு மாபெரும் விளி விடுத்திங்க. நம்ம மன உளைச்சல கவர்னருக்கு மின் அஞ்சல்ல அனுப்பச் சொல்லி. அது செம ஹிட் ஆச்சு. 25 ஆயிரத்துக்கு மேல லைக் + 10 ஆயிரத்துக்கிட்ட ரீட்வீட் + 2500-க்கும் அதிகமா கருத்துக் குவியல்னு ஒரே அசத்தல்தான்.

அன்னைக்கே இன்னோரு மஹா விளி. இந்த எம்.எல்.ஏ.க்கள் தொகுதி திரும்பயில வச்சு செஞ்சிடுங்க-னு. இங்லீஷ்ல. அதுக்கு இன்னும் சூப்பரான ரெஸ்பான்ஸ்.

இந்த சட்டமன்ற நாடகத்துக்கு முன்னாடியும் பின்னாடியும் மளமளனு தொடர்ந்து நெறயா விளிகள், ஒரே பரபரப்பா.

பெறகு நீங்க உங்க சோலிய பாக்கப் போயிட்டிங்க.

இதுக்கு இடையில, எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் டபுள் ஆயிருச்சு. நீங்க தொரத்த நெனச்ச எடப்பாடி, ரொம்ப ஸ்ட்ராங் ஆயிட்டாரு. நல்ல பேரும் எடுக்க ஆரம்பிச்சுட்டாரு, போங்க.

அப்புறமா, மூனு நாலு மாசம் கழிச்சு, ஜி.எஸ்.டி., பிக் பாஸ் எதிர்ப்பு-னு ஒங்க பொழப்புக்கே ஆபத்து வந்த ஒடனே, இப்ப வருஞ்சுகட்டிகிட்டு ஒரு கடும் விளி. ஊழலுக்கான ஆதாரங்கள சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு டிஜிட்டலா அனுப்பச்சொல்லி. ஒரே நாள்ல இது அள்ளுன லைக்கே 35 ஆயிரத்த தாண்டிருச்சு. (ஆனா என்ன, நம்ம ஊரு அனுமந்தன்பட்டி-ல / அது மாதிரி கிராமங்கள்ல நூத்துக்குத் தொன்னூறு பேருக்கு இந்த டிஜிடல் வசதி கெடையாது. சரி அது கெடக்கட்டும்…)

இந்த விளியோட வீறாப்பப் பாத்ததும், ஆண்டவர் / உலக நாயகரான நீங்க தெருவுல எறங்கி, நெடுவாசல், கிரானைட்டு, மணல், டாஸ்மாக்-னு புகுந்து வெளையாடப்போறிங்க-னு நெனச்சா, நீங்க அடுத்த சம்பாத்தியத்துக்கு கெளம்பிட்டிங்க. சச்சின் கம்பெனி ஆட்டத்துக்கு அம்பாஸிடர்னு ஸ்டார் ஹோட்டல்ல பனியன் டவுசர் ரிலீஸ் பண்றதுக்கு.

இத சமாளிக்கிறதுக்காக, டெங்கு காய்ச்சலப் பத்தி கொசுறா ஒரு விளி,  கடைசியா. சொகுசான, பாதுகாப்பான, கவைக்குதவாத, விடலைத்தனமான ட்வீட் / விளி அரசியல் மிதப்புல இருந்து மொதல்ல எவிக்ட் ஆகுங்க பிக் பாஸ் கமல்(ஜி). ரீயாலிடி ஷோ-ல இருந்து ரீயாலிடிக்கு வாங்க.

சும்மா சும்மா ஏவி விடுறத விட்டுட்டு, மக்கள் இருக்குற நிஜ களத்துல கால பதிங்க. அங்க களமாடிட்டு இருக்காங்க வளர்மதி மாதிரியான வீர இளைஞர்கள். வாங்க கமல். ( Raja nayagam appa