டில்லி
பிரதமர் மோடி ஆரம்பித்த நானும் காவலன் தான் ஹேஷ்டாக் குறித்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காவலர் திருடன் ஆனார் என தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதற்கு எதிர்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி நானும் காவலன் தான் என்னும் ஹேஷ் டாக் டிவிட்டரில் தொடங்கி இருக்கிறார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் “நான் உங்களுடைய பாதுகாவலனாக உறுதியுடன் சேவை செய்து வருகிறேன்.
Your Chowkidar is standing firm & serving the nation.
But, I am not alone.
Everyone who is fighting corruption, dirt, social evils is a Chowkidar.
Everyone working hard for the progress of India is a Chowkidar.
Today, every Indian is saying-#MainBhiChowkidar
— Narendra Modi (@narendramodi) March 16, 2019
அதே நேரத்தில் நான் தனி ஒருவன் இல்லை. சமூக கொடுமைகள், ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக போரிடும் அனைவருமே காவலர்கள் தான் அனைத்து இந்தியர்களும் இன்று நானும் காவலன் தான் என சொல்லி பெருமை கொள்கின்றனர்” என பதிந்துள்ளார்.
அதை ஒட்டி இந்த ஹேஷ் டாக் ஐ பலரும் பதிய இது பிரபலம் அடைய தொடங்கியது. இவ்வாறு பதிபவர்களுக்கு மோடி தனது டிவிட்டரில் நன்றி தெரிவித்து வருகிறார்.
இவ்வாறு பதிந்தவர்களில் நிரவ் மோடி என்பவரும் ஒருவர் ஆவார். அதற்கு பிரதமர் மோடி தனதனது டிவிட்டரில், “@நிரவ்மோடி உங்களுடைய பங்களிப்பு #நானும்காவலன்தான் இயக்கத்தில் இடம் பெற்றதால் இயகக்ம் வலுவடைகிறது.” என பதிந்துள்ளார்.
இது நெட்டிசன்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியின் இந்த டீவிட் உடனடியாக நீக்கப்பட்டுள்ளது. ஆயினும் நெட்டிசன்கள் அது நீக்கப்படும் முன்பே அதன் ஸ்கிரீன் ஷாட் எடுத்துள்ளனர். அதை பதிந்து பலரும் மோடியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
https://twitter.com/divyaspandana/status/1106895593673314304?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1106895593673314304&ref_url=https%3A%2F%2Fwww.firstpost.com%2Fpolitics%2Fcongress-mocks-mainbhichowkidar-campaign-after-pm-modis-twitter-handle-tags-fake-nirav-modi-other-parody-accounts-6274391.html
இவர்களில் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப குழு தலைவரும் பிரபல நடிகையுமான ரம்யா என அழைக்கப்படும் திவ்யா ஸ்பந்தனாவும் ஒருவர். இவர் இந்த ஸ்கிரீன் ஷாட்டை வெளியிட்டு, “மோடிஜி. எதற்காக உங்கள் டிவிட்டை நீக்கி உள்ளீர்கள். ஹ ஹ ஹ! உங்களால் காவலன் ஆக மாற முடியும் என்றால் நிரவ் மோடியால் முடியாதா?” என கிண்டல் செய்துள்ளார்.
இதைப் போலவே பல மாநில காங்கிரஸ் தலைவர்களும் மோடியை விமர்சித்துள்ளனர். காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, “பிரதமர் நிஜமாகவே நிரவ் மோடியின் டிவிட்டர் மூலம் தனக்கு விளம்பரம் தேடிக்கொள்கிறாரா?” என பதிந்துள்ளார். தற்போது நெட்டிசன்கள் தொடர்ந்து இந்த ஸ்கிரீன் ஷாட் உடன் மோடியை கடுமையாக விமர்சித்து வருகின்ரனர்.