கடந்த சில வருடங்களாகவே புற்று நோய்க்கு எதிராக சிகிச்சை எடுத்து வந்த ரிஷி கபூர். ஏப்ரல் 29 அன்று உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.
நேற்று ஏப்ரல் 30 காலை 8:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயர் பிரிந்தது. ரிஷி கபூருக்கு வயது 67.
இவர் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் தந்தை ஆவார்.இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கம் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நடிகை நக்மா தனது சமூக வலைத்தளத்தில் மருத்துவமனையில் புன்னகையுடன் ரிஷிகபூர் இருந்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ரிஷிகபூருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவர் ரிஷிகபூர் பாடலை பாடுவதும் அதற்கு ரிஷிகபூர் பாராட்டு தெரிவிக்கும் காட்சியும் இருந்தது.


இந்த பதிவில் நடிகை நக்மா, இந்த விடீயோ நேற்றிரவு மருத்துவமனையில் எடுக்கப்பட்டதாக கூறியிருந்தார். ஆனால் உண்மையில் இந்த வீடியோ கடந்த பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டது என்றும், நக்மா தவறாக தகவலை அளித்துள்ளதாகவும், உடனடியாக இந்த வீடியோவை நீக்கிவிடவும் என்றும் சமூக வலைத்தள பயனாளிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.