சென்னை

டந்த 1972 ஆம் வருடம் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மறைந்த ஜெயலலிதா தனியே சென்று ஷாப்பிங் செய்த நிகழ்வு வைரலாகி வருகிறது.

நெட்டிசன் லட்சுமிபிரியா பாகநதி முகநூல் பதிவு

தாம் நடிகையான பிறகு தானே கடைக்குச் சென்று  பொருட்களை வாங்குவதில் உள்ள மகிழ்ச்சியை இழந்த ஜெயலலிதா 1972 ஆம் வருடம் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தனியே சென்று ஷாப்பிங் செய்துள்ளார்.  அடையே அவர் சென்னை அல்லது ஐதராபாத்தில் செய்திருந்தால் அவரை சுற்று பெரும் கூட்டம் கூடி அவரது ஷாப்பிங் அனுபவத்தை அவர் வெறுத்து இருப்பார்.

சிவாஜி கணேசனுடன் நடித்த ஒரு தமிழ்ப்பட படப்பிடிப்புக்காக ஜெயலலிதா ஸ்ரீநகர் சென்றிருந்தார்.  தன்னை யாரும் அடையாளம் கண்டு கொள்ளாததால் மகிழ்ச்சி அடைந்த அவர் தான் தங்கி இருந்த ஓட்டலுக்கு அருகில் உள்ள கடைக்குச் சென்றார்.  அந்தக் கடையில் ஏராளமான கம்பளம் மற்றும் மண் பாண்டங்கள் இருந்தன.  கடையில் ஒரு முதியவர் தரையில் அமர்ந்திருந்தார்.

ஏற்கனவே இங்கு விலையை ஐந்து மடங்குக்கும் மேல் கூட்டிச் சொல்வார்கள் எனவும் பேரம் பேசி வாங்க வேண்டும் எனவும் ஜெயலலிதாவுக்குச் சொல்லப்பட்டிருந்தது.  இதற்கு காரணம் வருடத்தில் மூன்று மாதம் மட்டுமே அங்கு வர்த்தகம் நடக்கும் என்பதும் பெரும்பாலும் வெளிநாட்டினர் மற்றும் ஓரளவு உள் நாட்டினர் வருவதாலும் என்பதாகும்.  அந்தக் கடையில் ஜெயலலிதா தாம் விரும்பியதை எல்லாம் சாதாரண பெண் போலப் பேரம் பேசி வாங்கி மகிழ்ந்துள்ளார்.

அந்த முதியவரிடம் அவர் தாம் வாங்கிய பொருட்களுக்கு பில் போட சொல்லி உள்ளார்., அந்த முதியவர் ஜெயலலிதாவை ஆச்சரியமாகப் பார்த்து அப்படியே நின்றுள்ளார்.  இதையொட்டி ஜெயலலிதா என்ன ஆயிற்று எனச் சத்தமாக கேட்டுள்ளார்.  பக்கத்துக் கடைக்காரர் அங்கு வந்து விவரத்தை விளக்கி உள்ளார்.

அந்த முதியவரின் வாழ்க்கையில் அது வரை ஒரே வாடிக்கையாளர் இவ்வளவு பொருட்களை வாங்கியது இல்லையாம்.

எனவே அந்தக் கடைக்காரர் இந்த ஆச்சரியத்தால் அப்படியே நின்று விட்டதாகத் தெரிவித்த பக்கத்துக் கடைக்காரர் பில் போட உதவி செய்துள்ளார்.  அந்த கடைக்காரர் அடைந்த அதிர்ச்சியை விட இத்தனை  பொருட்களையும் எவ்வாறு ஜெயலலிதா சென்னைக்கு எடுத்து வந்திருப்பார் என்பதை எண்ணும் போது பலருக்கு அது மேலும் ஆச்சரியமாக இருந்திருக்கும்.