அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்கு உலகம் முழுவதும் 20 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்.
இந்தியாவில் இந்த ஆண்டுக்கான 41 திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கான அறிவிப்பை நெட்ஃப்ளிக்ஸ் சமீபத்தில் வெளியிட்டது.
கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவில் ‘சாக்ரெட் கேம்ஸ்’, ‘டெல்லி க்ரைம்’, ‘லூடோ’, ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் தனது முதல் போஸ்ட் புரொடக்ஷன் அலுவலகத்தை அடுத்த ஆண்டு மும்பையில் தொடங்கவுள்ளதாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.