காத்மாண்டு: நேபாளத்தில் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அதில் பயணிகளின் நிலை குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. இதனால், அதில் பயணம் மேற்கொண்ட 4 இந்தியர் உட்பட 22 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நேபாள நாட்டின் சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து 22 பேருடன் நேற்று காலை தாரா ஏர் என்ற விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் மாயமானது. நேபாளத்தின் போக்கராவில் இருந்து ஜோம்சோமுக்கரானுக்க காலை 9:55 மணிக்கு புறப்பட்டது. காலை 10:15க்கு அந்த விமானம் ஜோம்சோமில் தரையிறங்க வேண்டும். இந்நிலையில் விமானம் புறப்பட்ட, 15 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.  விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகளும் 3 விமான ஊழியர்களும் பயணித்தனர்.

இந்த விமானத்தை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், நேபாளத்தில் 22 பேருடன்  மாயமான விமானம் மஸ்டங் பகுதியில் உள்ள மலை யில் மோதி நொறுங்கி உள்ளது தெரிய வந்துள்ளது. கோவாங்க் கிராமத்தில் உள்ள லாம்சே நதிக்கரை அருகே இருந்த மலைப்பகுதியில்,  இந்த விமானம் விழுந்து நொறுங்கியுள்ளதாக, உள்ளூர்வாசிகள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு பேர், இரண்டு ஜெர்மனியர்கள், 13 நேபாளியர்கள் பயணம் செய்தனர். மூன்று ஊழியர்களும் அதில் இருந்தனர். இந்த விபத்தில், 22 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் சிக்கிய இந்தியர்கள், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய பெயர்கள் அஷோக் குமார் திரிபாதி, தனுஷ் திரிபாதி, ரிதிகா திரிபாதி, வைபவி திரிபாதி என்று, விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.