இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ’நெஞ்சுக்கு நீதி’.
ஆயுஷ்மான் குரானா இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியான ‘ஆர்டிக்கிள் 15’ என்ற இந்தி படத்தின் ரீமேக் இது.
சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை தோலுரித்துக் காட்டிய இப்படம் வட இந்தியாவில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது.
வெளியீட்டுக்கு தயாராகி வரும் நெஞ்சுக்கு நீதி படத்தின் டீசர் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் தலித் சிறுமிகளின் தற்கொலை காட்சியில் இருந்து தொடங்குகிறது.
ஆகவே, சாதிய ஏற்றத் தாழ்வுகள், பாலியல் கொடுமையை பின்னணியாக வைத்து உருவாகயுள்ள படம் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
டீசர்: